கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் பேக்கரிகளில் பூஞ்சை மற்றும் கெட்டுப்போன உணவுகள் விற்பதை நமது உள்ளாட்சி சாரல் செய்தித்தாளில் நேற்று (29-11-2024) செய்தி வந்ததை அடுத்து சின்னசேலம் புதியபேருந்து நிலையத்தில் உள்ள மஹாலக்ஷ்மி ஐயங்கார் தனியார் பேக்கரியில் உணவு பாதுகாப்பு அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார்.பிறகு
பேக்கரியின் குடோனின் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் இடத்தில் மிகவும் அசுத்தமாக உள்ளதையும் வெளிப்புற குப்பைகள் மற்றும் உபயோகமற்ற பழைய பொருட்களால் தூசுகள் அண்டி காணப்பட்டதாலும் கடையில் பணியாளர்கள் யாரும் தலைக்கு தொப்பி, முக கவசம் பணியாளர்கள் எவருக்கும் மருத்துவச் சான்று வழங்கப்படவில்லை அதுமட்டுமில்லாத பிளாஸ்டிக் அதிக பயன்பாடு இருப்பதை கண்டறிந்தனர். மேலும் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தி காரம் மற்றும் இனிப்புகளுக்கு பயன்படுத்தப்பட்டும்,டியூட்டி ஃப்ரூட்டி என்கிற அதிக சுவையூட்டி பொருட்களை கண்டறிந்து கிட்டத்தட்ட 12 கிலோ அளவிற்கு உள்ள பொருட்களை உணவுப் பாதுகாப்பு அலுவலர் அவர்கள் குப்பையில் கொட்டி அழித்தனர். மஹாலக்ஷ்மி ஐயங்கார் பேக்கரிக்கு உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அவர்களால் ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் சின்ன சேலம் மெயின் ரோட்டில் பாரத ஸ்டேட் வங்கி அருகில் உள்ள ரோலக்ஸ் பேக்கரியில் ஜூஸ் வகைகளுக்கு பயன்படுத்த வைத்திருந்த அழுகிப்போன வாழைப்பழங்கள் மற்றும் பூந்தி உள்ளிட்ட பொருட்களுக்கு சேர்க்க வைத்திருந்த செயற்கை நிறமூட்டியும் கைப்பற்றி அழித்தனர். பிளாஸ்டிக் உபயோக அதிகம் இருப்பதை கண்டறிந்து உணவு பாதுகாப்பு துறை அலுவலரால், ரோலக்ஸ் பேக்கரிக்கு ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்பட்டது. இரு பேக்கரிகளிலும் உணவு பொருட்கள் சேம்பில் எடுக்கப்பட்டு அரசு ஆய்வகத்தில் ஆய்விற்கு எடுத்து சென்றனர்.