திருவண்ணாமலை அருகே காட்டுநல்லான் பிள்ளை பெற்றாள் மதுரா தேவனந்தல் கிராமத்தில் வசிக்கும் சக்கரபாணி மகன் மணிகண்டன் (வயது 27) என்பவர் கூலி வேலை செய்து வருகிறார் இவர் கூலி வேலை செய்துவிட்டு தினமும் மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

 இந்நிலையில் மது அருந்திவிட்டு ரோட்டோரம் உள்ள விவசாய நிலத்தில் இருக்கும் கிணற்றில் விழுந்து இறந்து கிடந்தார் அப்பகுதியில் பொதுமக்கள் பார்த்து கிராம நிர்வாக அலுவலரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர் தீயணைப்பு துறையினர் மீட்பு  பணியில் ஈடுபட்டு பிணத்தை மீட்டனர் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.