கோயம்புத்தூர்.நவம்பர்.30.கோயம்புத்தூர் 100 அடி ரோடு மலபார் கோல்டு &
டைமண்ட்ஸ் ஷோரூமில் ஸ்வர்ணகிருதி (SWARNAKRITI) என்ற புதிய தங்க நகை
கலெக்ஷன் அறிமுகம். இந்த புதிய கலெக்சனை திருமதி.ராதா பெல்லன் (நிறுவனர்
அனைத்து மகளிர் தொழில் முனைவோர் சங்கம் கோயம்புத்தூர்), திருமதி.பிரபா
பழனிவேல் (தாளாளர் ஆதிரா சர்வதேச பள்ளி கோயம்புத்தூர்), ஆகியோர்
அறிமுகப்படுத்தினர், இந்நிகழ்ச்சியில் திரு.நௌசாத் (மலபார் கோல்டு &
டைமண்ட்ஸ் தமிழ்நாடு மேற்கு மண்டலா தலைவர்), திரு.ரபிக் (மலபார் கோல்டு &
டைமண்ட்ஸ் கோயம்புத்தூர் 100 அடி ரோடு கிளை மேலாளர்), திரு.தேவராஜ்
(மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் கோயம்புத்தூர் 100 அடி ரோடு கிளை வர்த்தக
மேலாளர்), மற்றும் கிளை ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தற்போது 13 நாடுகளில் 360-க்கும் மேற்பட்ட
சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை
நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை,
திருநெல்வேலி, நாகர்கோயில், சேலம், திருச்சி, ஈரோடு, வேலூர், இராமநாதபுரம்,
ஈரோடு, தருமபுரி, தஞ்சாவூர், கும்பகோணம், திருப்பூர், காரைக்குடி, மயிலாடுதுறை,
புதுக்கோட்டை, மார்த்தாண்டம், புதுச்சேரி, கரூர் ஆகிய நகரங்களில் 29 கிளைகளை
கொண்டுள்ளது.
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலைநயமிக்க அணிகலன்கள்
கிடைப்பது சிறப்பம்சமாகும். அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான ‘மைன்’
பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால்
செய்யப்பட்ட ‘எரா’ மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்தகற்களால்
செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’ நகைகள், கைவினை கலைஞர்களால்
கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’ நமது கலாச்சாரத்தை
பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’
குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ ஆகியவை
இந்தகண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இதைத்தவிர அழகிய நகைகளை சிறப்பு
சலுகையில் வாங்கவும் வாய்ப்பளிக்கப்படுகிறது.