லக்னோ: சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சகநாட்டைச் சேர்ந்த, ஐரா சர்மாவுடன் மோதினார். 49 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தி சிந்து 21-10, 12-21, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென், ஸ்ரேல் வீரர் டேனியல் டுபோவென்கோவுடன் மோதினார். இதில் லக்சயா சென் 21-14, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றில் கால்பதித்தார். மற்றொரு ஆட்டத்தில் பிரியன்ஷு ரஜாவத் 21-15, 21-8 என்ற செட் கணக்கில் வியட்நாமின் லே டக் பாட்டை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.