![thenkasi](https://ullatchisaral.com/wp-content/uploads/2025/02/thenkasi-1024x508.jpg)
சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் நல்லொழுக்க பயிற்சி முகாம் நடந்தது. முகாமுக்கு கல்லூரி முதல்வர் கா.பு.கணேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக புளியங்குடி கிளை மேலாளர் சிவகுமார், திருநெல்வேலி மண்டல பயிற்சி பள்ளி உதவி பொறியாளர் ராஜேந்திரன், திருநெல்வேலி மண்டல விபத்து பிரிவு உதவி பொறியாளர் உலகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் மு.மோகன கண்ணன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வன், துரைராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள், சாலையில் செல்லும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள், நல்லொழுக்க பழக்கவழக்கங்கள் குறித்து பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் திருநெல்வேலி மண்டல தொழிற்சங்க துணைப் பொதுச் செயலாளர் ஷார்ப் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் பண்டாரக்கண்ணு, டிடிஎஸ் மாநில பொதுச் செயலாளர் ராஜாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பேராசிரியர் பிரேம் சந்தர் நன்றி கூறினார்.