![GOLD](https://ullatchisaral.com/wp-content/uploads/2025/02/GOLD-1024x597.jpg)
தங்கம் விலை இன்றும் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.63,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த டிச.8-ம் தேதிக்கு பிறகு, தங்கம் விலை உயர்ந்து வந்தது. ஜன.3-ம் தேதி ரூ.58,080 ஆகவும், ஜன.16-ம் தேதி ரூ.59,120 ஆகவும் இருந்தது. ஜன.22-ம் தேதி பவுன் தங்கம் ரூ.60 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. இதன்பிறகு, தங்கம் விலை சற்று குறைந்திருந்தது.இருப்பினும், கடந்த 29-ம் தேதி தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. ஜன.31-ம் தேதி ஆபணத்தங்கம் ரூ.61 ஆயிரத்தையும், பிப்.1-ம் தேதி ரூ.62 ஆயிரத்தையும் தாண்டியது. நாள்தோறும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தங்கம் விலை இன்றும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.63,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 25 உயர்ந்து, ரூ. 7,930 ஆக இருந்தது.ஆபரணத்தங்கம் கடந்த 10 நாட்களில் பவுனுக்கு ரூ.3,360 அதிகரித்துள்ளது. 24 காரட் கொண்ட சுத்தத் தங்கம் விலை ரூ.69,200-க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை உயர்ந்து வருவதால், நகை வாங்குவோர் கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி, வெள்ளி ஒரு கிராம் ரூ.107 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாயாகவும் இருந்தது.