![e6fd01bf-0eb6-4d2a-8790-48d7510109b4](https://ullatchisaral.com/wp-content/uploads/2025/02/e6fd01bf-0eb6-4d2a-8790-48d7510109b4-1024x576.jpeg)
சென்னை. பிபரவரி Hemifacial spasm (HFS) கண் சிமிட்டும் நோய் என்று குறிப்பிடப்படும் இது அரிய நரம்பியல் கோளாறு அதாவது பலவீனமான நரம்பியல் நிலை. இது முகத்தின் ஒரு பக்கத்தில் தன்னிச்சையான தசை சுருக்கங்களை ஏற்படுத்துகிறது. இந்நிலையால் பாதிக்கப்படும் நோயாளியின் வாழ்க்கை தரத்தை கணிசமாக பாதிக்கிறது. அதே நேரம் இந்த HFS என்னும் கண் சிமிட்டும் நோய் பல ஆண்டுகளாக கண்டறியப்படாமல் அல்லது தவறாக கண்டறியப்பட முடியாமல் போகவும் வாய்ப்புண்டு.
ஆனால் இந்நிலைக்கு Microvascular Decompression (MVD) என்னும் அறுவை சிகிச்சையின் மூலம் உறுதியான தீர்வு கிடைக்கும் என்பதை பலரும் அறிந்திருக்கவில்லை.
இந்த HFS குறித்து போதுமான விழிப்புணர்வின்மை இல்லை என்பதால் சிகிச்சையளிப்பது தாமதமாகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அறுவை சிகிச்சை மூலம் திறம்பட குணப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் அறிகுறிகளுடன் குணமாக முடியாமல் அவதிப்படுவதை பார்க்கமுடிகிறது.
சவூதி அரேபியா ரியாத்தில் வசித்துவந்த சிவில் இன்ஜினியர் சஜீத். இவருக்கு 40 வயது ஆகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக இந்த கண் சிமிட்டல் நோய் அறிகுறியாக கவனித்தார். எனினும் அது மனஅழுத்தத்தால் நிகழ்ந்திருக்கலாம் என்று நினைத்து அந்த அறிகுறிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் இந்த அறிகுறியானது அவரது இடது கண்களிலிருந்து படிப்படியாக முழு முகத்துக்கும் பரவியது. இது மாறாமல் தொடர்ந்த நிலையில் அவரது முகத்தில் இழுப்பு அவரது வாழ்க்கையில் அசெளகரியத்தை அதிகரித்தது. இதனால் தொழில் விஷயங்களில் கவனம் செலுத்துவதில் அதிக சிக்கலை எதிர்கொண்டார். அதை எதிர்கொள்ளும் விதமாக இந்நிலைக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்று தனது முயற்சியை மீண்டும் தொடங்கினார். இந்த அறிகுறியை குணப்படுத்தும் வகையில் உள்நாட்டில் மட்டும் அல்ல உலகளவில் இருக்கும் சிகிச்சை முறைகளை குறித்த தகவல்களையும் ஆராய்ந்தார். மேலும் பல்நோக்கு மருத்துவமனைகளின் நிபுணர்களிடமும் இது குறித்து ஆலோசித்தார். ஆனால் பெரும்பாலான நிபுணர்கள் இந்த அறிகுறியை முழுமையாக குணப்படுத்தும் சிகிச்சை இல்லை என்றும் இந்த நிலையை ஏற்று வாழவேண்டும் என்றும் பரிந்துரைத்தது. ஆனாலும் அவர் இறுதியாக சிஸ் மருத்துவமனைக்கு வந்திருந்தார். நிபுணர்கள் இவரது அறிகுறிகளை முழுமையாக ஆலோசித்து உரிய பரிசோதனைக்கு பிறகு அவருக்கு Hemifacial spasm (HFS) கண் சிமிட்டும் நோய் இருப்பதை கண்டறிந்தனர்.
சிம்ஸ் மருத்துவமனை இந்த HFS நிலையில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு Microvascular Decompression (MVD) மைக்ரோவாஸ்குலர் டிகம்ப்ரஷன் சிகிச்சையை Intra-Operative Neuro-monitoring (IONM) இண்ட்ரா- ஆபரேடிவ் நியூரோ- கண்காணிப்பு வழிகாட்டுதலின் மூலம் நிரந்தர தீர்வை அளித்து அவர்கள் வாழ்க்கைக்கான தீர்வை அளிக்கிறது. இந்த MVD சிகிச்சையானது குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே செய்யப்படுகிறது