![2](https://ullatchisaral.com/wp-content/uploads/2025/02/2.jpg)
கோபிசத்தி மெயின்ரோடு காலேஜ் பிரிவு அருகில் இருந்த ஜெயமாருதி தியேட்டர் புதிய பொலிவுடன் விரிவுபடுத்தப்பட்டு ஜெயம் சினிமாஸ் என்ற பெயரில் 3 ஸ்கிரீன்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா முன்னாள் அமைச்சரும்,கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே .ஏ. செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.முதல் ஸ்கிரீனில் 364இருக்கைகள், 2-வது ஸ்கிரீனில் 250 இருக்கைகளும் , 3-வது ஸ்கிரீனில் 176-வது இருக்கைகளும் உள்ளது. மேலும்.டால்பிஅட்மாஸ் மற்றும் 7.1 டெக்னாலஜி வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.விழாவில் கலந்துகொண்டவர்களை ஜெயம் சினிமாஸ் திரையரங்கின் உரிமையாளர்கள் பிரனவ் கிருத்திக், பிரித்திகா, யு.எஸ்.பழனிச்சாமி மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். இதில் முத்து மஹால் உரிமையாளர் வெங்கடேஸ்வரன், டாக்டர் கணேசன், அமிர்தா, வக்கீல் கே.எம்.நடராஜன், மற்றும் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பண்ணாரி, முன்னாள் சேர்மன் வக்கீல் மவுதீஸ்வரன், லக்கம்பட்டி முன்னாள் பேரூராட்சி தலைவர் கே.என்.வேலுமணி , லக்கம்பட்டி பேரூராட்சித் தலைவர் அன்னக்கொடி ரவிச்சந்திரன், உட்பட வியாபாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் .