![thenkasi](https://ullatchisaral.com/wp-content/uploads/2025/02/thenkasi-1-1024x580.jpg)
வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி அவருக்கும் அவருடைய உறவினர்களுக்கும் உள்ள பிரச்சனை காரணமாக இருதரப்பும் வழக்கு பதிவு என்ற முறையினால் எதிர் தரப்பினர் தன்னை மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து பேட்டி
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் நெற்கட்டும் சேவல் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் தன்னுடைய உறவினர்களான எட்டு பேர் மீது தென்காசி மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது ; தன்னுடைய கணவரின் உறவினர்களான மாங்கனி, சக்திவேல், பேச்சிமுத்து, ராமர், பத்ரகாளி, சுப்புராஜ், மாரியப்பன், காளியம்மாள் ஆகியோர் மீது கூறி இருக்கும் புகாரானது ; நாங்கள் எங்களுடைய பூர்வீக விவசாய நிலங்களில் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம் அதில் வயலின் வரப்பு வெட்டும் பணியில் ஈடுபடும்போது காளியம்மாள் என்பவர் என்னிடம் வந்து பரப்பு வெட்டக்கூடாது என்று கூறி பிரச்சனை செய்தார் பின்னர் நான் மேலே கூறி உள்ள எட்டு நபர்களும் கையில் கம்பு மற்றும் அறிவாள்களுடன் எங்களது வயலுக்கு வந்து எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து எங்களை அடிக்க தயாரான நிலையில் எங்களை மிகவும் கொச்சையாகவும் என் கணவரின் மாற்றுத்திறனாளி தன்மையை அவதூறாக பேசி வந்தனர் இது சம்பந்தமாக காவல்துறையினர் தீர விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது குறித்து சுப்புலட்சுமி கணவர் சங்கரலிங்கம் என்பவர் பேசும்போது நான் ஒரு மாற்றுத்திறனாளி என்னுடைய மாற்றுத்திறனாளியின் நிலையை மிகவும் கொச்சைப்படுத்தும் வகையில் இவர்கள் பேசி வருகின்றனர் ஏதாவது பிரச்சனை நடந்தால் இரு தரப்புக்கும் தானே வழக்கு பதிவு செய்வார்கள் என்று எதிர் தரப்பினர் மிகவும் சாதாரணமாக பேசி வருகின்றனர் இவர்கள் செயலால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது எனக்கு ஏதாவது விபரீதம் நேர்ந்தால் அதற்கு மேலே குறிப்பிட்டுள்ள எட்டு பேரும் தான் காரணம் என்று கூறிய அவர், எதிர்தரப்பினர் காவல்துறை விசாரணைக்கும் சரிவர ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பது காவல்துறையினர்களுக்கு தெரியத்தான் செய்கிறது இருந்தும் எங்களை வாட்டி வதைத்து வருகின்றனர் இதனால் மாவட்ட ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளர் தீர விசாரணை செய்து இதற்கு தகுந்த முடிவு எடுத்து எங்களை காப்பாற்றும் படி கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.