![se](https://ullatchisaral.com/wp-content/uploads/2025/02/se-1024x818.jpg)
டிபிஎஸ் பவுண்டேஷன் மற்றும் ஹக்தர்ஷக் இணைந்து இந்தியா முழுவதிலும் செயல்படுத்தும் நிதிசார் நலத்திட்டம் தமிழ்நாட்டில் மட்டும் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயன்பெறுவர்! சேலத்தில் ரேடிசன் ஹோட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பில் டிபிஎஸ் வங்கி இந்தியாவின் க்ரூப் ஸ்ட்ராடஜிக் மார்க்கெட்டிங் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவின் மேலாண்மை இயக்குனர் அஸ்மத் ஹபிபுல்லா,ஹக்தர்ஷக்கின் தலைமைச் செயல் அதிகாரியும் நிறுவனர்களில் ஒருவருமான அனிகட் டோகர்ஆகியோர் பேசும்போது, “டிபிஎஸ் பவுண்டேஷனின் அடிப்படையான நோக்கங்களில் ஒன்று வறிய நிலையில் உள்ள மக்களையும் பொருளாதார வளர்ச்சியில் இணைக்கும் முயற்சியும் ஒன்று. இந்த அடிப்படையில் எங்களது சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை ஹக்தர்ஷக்குடன் இணைந்து வெற்றிகரமாகச் செயல்படுத்துகிறோம். மேலான பொருளாதார எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் வறிய நிலையில் உள்ள மக்களுக்கு நிதி சார்ந்த எழுத்தறிவு, நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான உதவிகளோடு செய்து வருகிறோம். சமூகத்துக்கு பயனுள்ள காரியங்களைச் செய்யும் ஹக்தர்ஷக் போன்ற அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் சமூக மதிப்பை நீண்டகால அளவில் அதிகரிக்கிறோம். டிபிஎஸ் பவுண்டேஷன் இத்திட்டத்தின் பயன் இன்னும் பலருக்கும் சென்று சேர்வதற்காக தனது நிதி சார்ந்த உறுதிப்பாட்டை 5.1 மில்லியன் சிங்கப்பூர் டாலருக்குக் கூடுதலாக சமீபத்தில் அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் தாக்கம் தமிழ்நாட்டில், குறிப்பாக சேலத்தில் நேர்மறையான பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தி எங்களது கூட்டுறவு ஆக்கப்பூர்வமான பலன்களை உண்டாக்க காரணமாகியுள்ளது. ஹக்தர்ஷக்குடன் சேர்ந்து வறிய நிலையில் உள்ள குடிமக்களை நாங்கள் தன்னிறைவு ஆக்குகிறோம். முறைசார்ந்த நிதி அமைப்புக்குள் அவர்களைக் கொண்டுவர அவர்களிடம் உள்ள அறிவுசார் இடைவெளிகளையும் நிரப்புகிறோம். இதன்மூலம் வறிய நிலையில் உள்ளவர்களின் சமூகத்தினர் நெடுங்கால அடிப்படையிலான பொருளாதாரக் கட்டுமானத்தை உறுதிசெய்வதற்கான தீர்வாக இது மாறியுள்ளது” என்றார்.தமிழ்நாட்டில் குறிப்பாக சேலத்தில் இத்திட்டத்தினால் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எங்களது கூட்டுறவு வலுப்பெற்றுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் 66 ஆயிரத்து 9 குடிமக்கள் ஒட்டுமொத்தமாகப் பலன்பெற்றுள்ளனர். இவர்களில் 86.37% பேர் பெண்கள். 2.33% பேர் 65 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள். அத்துடன் 170 பெண் முகவர்களில் 147 பேர் ஹக்தர்ஷக்குகளாகப் பயிற்சி அளிக்கப்பட்டு வாழ்வாதாரத் தொகையாக 57.67 லட்சம் ரூபாயை ஈட்டியுள்ளனர்.30-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் செயல்படுகிறது. 45 ஆயிரம் பேர் இதுவரை முகவர்களாகப் பயிற்சி பெற்றுள்ளனர்.இதன் மூலம் 68 லட்சம் இந்தியக் குடிமக்களும் 93 ஆயிரம் சிறு வர்த்தகங்களும் பலன் பெற்றுள்ளன.