![ne](https://ullatchisaral.com/wp-content/uploads/2025/02/ne-1024x461.jpg)
கனிமொழி கருணாநிதி எம்.பி.,யை வரவேற்ற நெல்லை மேயர் கோ.ராமகிருஷ்ணன்!திருநெல்வேலியில் நடைபெற்று வரும் எட்டாவது புத்தகத் திருவிழாவுக்கு வருகை தந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதியை, திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன் என்ற கிட்டு வரவேற்றார்.
அப்போது நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் இரா.சுகுமார், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், திமுக மத்திய மாவட்டப் பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன் கான், நெல்லை கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் கிரகாம்பெல், மேயரின் தனி உதவியாளர் சேக்பிள்ளை உள்பட பலர் உடன் இருந்தனர்.