தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள பொட்டல்புதூர் அரசு தொடக்கப்பள்ளியில் வைத்து, ரத்த தானம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இஸ்லாமிக் சென்டர் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் கட்டி அப்துல்காதர் தலைமை தாங்கினார். பொட்டல்புதூர் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் செயலாளர் முகமது கனி, திமுக ஆதிதிராவிடர் நலப் பிரிவு கடையம் ஒன்றிய பொறுப்பாளர் முருகேசன், ஜெய்லானி, பொட்டல்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சுடலை முத்து, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏஒன் துரை, ஆகியோர் முன்னிலை வகித்தனர்,கடையம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் பழனிக்குமார் தொடங்கி வைத்தார். பொட்டல்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன்,ரவணசமுத்திரம் சேவாலயா பொறுப்பாளர் சங்கிலி பூதத்தான், ரவணசமுத்திரம் பிரைமரி முஸ்லிம் லீக் தலைவர் இக்பால், ஆகியோர் பேசினர். மாவட்டத் துணைச் செயலாளர் நல்லாசிரியர் செய்யது மசூது வரவேற்றார். எஸ்டியூ மாவட்ட துணைச் செயலாளர் காதர் மைதீன் நன்றி கூறினார். திருநெல்வேலி அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை ஊழியர்கள் ரத்த பரிசோதனை செய்தனர். தென்பொதிகை வியாபாரிகள் நலச் சங்க பொருளாளர் பாக்யராஜ் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொட்டல்புதூர் பிரைமரி நிர்வாகிகள் தலைவர் அசன் மைதீன், செயலாளர் அப்பாஸ் பொருளாளர் சையது மூஸா, மாவட்ட மாணவரணி தலைவர் ரிபாய் வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் பீர் முகம்மது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர், இதில் கலந்துகொண்டு இரத்த தானம் செய்த ஒவ்வொருவருக்கும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக தலைக்கவசம் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.