![1](https://ullatchisaral.com/wp-content/uploads/2025/02/1-1-1024x594.jpg)
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் தை தேரோட்டம் நடைபெற்றது. நம்பெருமாள் முத்துப்பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் உபநாச்சியார்களுடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நான்கு உத்தர வீதிகளில் வலம் வந்த தைத்தேர் “ரங்கா”, “ரங்கா”, “கோவிந்தா”, “கோவிந்தா” என விண்ணை பிளக்கும் பக்தி கோஷத்துடன் ரங்கநாதர் வீதி உலா கண்டார்.