திருத்தணி அடுத்த பட்டாபி ராமாபுரம் கிராமத்தில் ஆண்டுக்கு ஒரு முறை தை மாதத்தில் முருக கடவுள் விதிவுலா வருவது வழக்கம். இந்த ஆண்டும் மலைக்கோயில் பின்புறம் முருகக்கடவுள் படிக்கட்டுகளின் வழியாக புறப்பட்டு நல்லான் குளம் வந்தடைந்தார் தொடர்ந்து அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் சுவாமி எழுந்தருளி சித்துர் சாலை பைபாஸ் சென்னை சாலை உள்ளிட்டபகுதிகளில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு பட்டாபிராமாபுரம் கிராம எல்லையில் வந்து அடைந்தார் அங்கு கிராம பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் கிராமிய கலை நிகழ்ச்சிகளோடு ஆடிப்பாடி சுவாமியை வரவேற்றனர் தொடர்ந்து இங்குள்ள குளக்கரையில் உள்ள மண்டபத்தில் மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது தொடர்ந்து கிராமத்தில் அனைத்து வீதிகளிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் நிகழ்ச்சியில் அன்னதானம் வழங்கப்பட்டது விழாவை முன்னிட்டு கிராமம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் பக்தர்கள் திருக்கோயில் இணைஆணையர் ரமணி மேற்பார்வையில் சிறப்பாக செய்திருந்தனர்.