![ULAGAM](https://ullatchisaral.com/wp-content/uploads/2025/02/ULAGAM-4-1024x597.jpg)
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் பேருந்து ஒன்று, லாரி மீது மோதிய விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெக்சிகோவின் தெற்கு மாகாணத்தில் உள்ள கான்குனில் இருந்து டபாஸ்கோவிற்கு அதிகாலை நேரத்தில், 48 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து பேருந்து தீ பற்றியது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்றும் சிலர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.இச்சம்பவம் குறித்து விபத்து நடந்த பகுதியின் மேயர் ஓவிடியோ பெரால்டா கூறுகையில், கான்குனில் இருந்து டபாஸ்கோவுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து விபத்தில் சிக்கியதில், பலர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளோம் என்றார்