
கள்ளக்குறிச்சி தலைமை தபால் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே தாய் மற்றும் மகன் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைக் கண்ட அவரது கணவர் சம்பவ இடத்தில் கதறி கதறி அழும் காட்சி மிகவும் வருத்தத்தையும் பரிதாபத்தையும், உள்ளாக்கியது. இச்சம்பவத்தை அறிந்த கள்ளக்குறிச்சி காவல் நிலைய போலீசார் உடனடியாக விரைந்து சென்று பிரேதத்தைக் கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.