
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் திமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆணைக்கிணங்க கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளரும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான தா.உதயசூரியன் அறிவுறுத்ததலின் பேரில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிக்கண்ணன் ஆலோசனைப்படி வருகின்ற மார்ச் 1-ல் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கழக நிர்வாகிகள் கழக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் குறித்து அரசூர் தனியார் திருமண மண்டபத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதனை தொடர்ந்து தமிழகத்தில் இந்தி திணிப்பை புகுத்தும் மத்திய அரசை கண்டித்து கிழக்கு ஒன்றிய செயலாளர் மா .சந்திரசேகரன் தலைமையில் அரசூர் கூட்டுச்சாலையில் அனைத்து கடைகளுக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கினர் இதில் மத்திய அரசை கண்டித்து கடுமையான கோஷங்களை எழுப்பினார் உடன் மாவட்ட ஒன்றிய கிளை கழக செயலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்