
oppo_2
திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் அரியன் வாயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் நிர்மலா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர் அபூபக்கர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்,மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ்,துணைத்தலைவர் அலெக்சாண்டர் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பல்வேறு திறனறியும் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அன்பரசு,மீஞ்சூர் வியாபாரிகள் நல சங்க தலைவர் ஷேக் அகமது,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.பின்னர் ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இதில் பல்வேறு வேடங்களை அணிந்து மாணவ மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.