
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசாமி கோவிலில் மாவட்ட இளைஞரணி சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வேண்டி வடக்கு மாவட்ட செயலாளர் செ கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமையில் தங்க தேர் இழுத்து சிறப்பு தரிசனம்
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாரயணசுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோயிலில் கழக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் அரியணையில் அமர்ந்திட மாவட்ட இளைஞரணி செயலாளர் சந்திரன் ஏற்பாட்டில் தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமையில் தங்கத்தேர் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு கோயிலின் உட்பிரகார பகுதிகளில் தங்கதேரினை இழுத்து வழிபாடு செய்தனர் முன்னதாக சங்கரநாரயணசுவாமி மற்றும் கோமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து விசேஷ பூஜைகள் நடைபெற்றது, அதன் பின்னர் 500 க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பிரசாத பை வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் கண்ணன் என்ற ராஜீ, கழக அண்ணா தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் கந்தசாமி பாண்டியன், மாவட்ட கழக அவைத்தலைவர் வி பி மூர்த்தி, இணை செயலாளர் சண்முகப்ரியா, துணை செயலாளர் பொய்கை சோ மாரியப்பன், சகுந்தலா தனபால், மண்டல அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் ராமையா, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் கிருஷ்ணன் என்ற கிட்டுராஜா, ராமசாமி என்ற ரவி, சந்திரன், சத்யா தீபக், பாலசுப்பிரமணியன், சங்கரசுப்பிரமணியன், குட்டி மாரியப்பன், குருசேவ், மகாதேவன், டாக்டர் திலீபன் ஜெய்சங்கர், மதன், தீக்கனல் லெட்சுமணன், ஒன்றிய கழக செயலாளர்கள் டாக்டர் சுசீகரன், பெரியதுரை, பொன் முத்துவேல் சாமி, ராஜாராம் பாண்டியன், வேல்முருகன், செல்வராஜ், இளசை தேவராஜ், முத்துப்பாண்டியன், ராமதுரை, மகாராஜன், ரமேஷ், ரவிச்சந்திரன், நகர கழக செயலாளர்கள் ஆறுமுகம், கணேசன், சங்கரபாண்டியன், பேரூர் கழக செயலாளர்கள் முத்துக்குட்டி, மாடசாமி, சுதாகர், மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.