
வேலூர் மாவட்டம் ,ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில் தமிழகத்திலேயே முதன் முறையாக முழு கணுக்கால் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை (Talus Replacement Surgery) முதல் முறையாக செய்யப்பட்டது”.
ஸ்ரீசக்தி அம்மாவின் தெய்வீக அருளாசியோடு இயங்கி கொண்டிருக்கும் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை பிரிவில் மருத்துவ வல்லுனர்கள் சாதனை புரிந்ததை மருத்துவ இயக்குனர் Dr.N. பாலாஜி பாராட்டிபேசுகையில்
திலிப்ராய், வயது 20 அவர் 3 மாதங்களுக்கு முன்பு உயரத்தில் இருந்து கீழே விழுந்ததைத் தொடர்ந்து கடுமையான கால் வலி மற்றும் நடக்கவே சிரமம் போன்ற புகார்களை எங்கள் எலும்பு மருத்துவரிடம் தெரிவித்தார்.
நோயாளியின் நோயை கண்டறிய X-Ray, CT மற்றும் MRI Scan எடுக்கப்பட்டது. அதன் மூலம் நோயாளியின் கணுக்கால் எலும்பு மாறி கூடியதை (Malunion) கண்டறிந்தோம் இதன் தொடர்ச்சியாக இரத்த நாள நசிவு (Avascular necrosis) இருந்ததை அறிந்தோம்.
பொதுவாக இந்த மாதிரியான கணுக்கால் முறிவுக்கு (Plate & Screw) மூலம் சரி செய்யப்படும், ஆனால் இதன் வெற்றி சதவீதம் குறைவே. ஆகையால் நோயாளியின் வயதை மனதில் கொண்டு இன்னும் நெடுங்காலம் அவருக்கு நல்ல நடைபயிற்சி தேவை என்பதால் இந்த முழு கணுக்கால் அறுவை சிகிச்சை எலும்பியல் துறையை சார்ந்த Dr. ரெஜித் மேத்யூஸ் முதன்மை மருத்துவராகவும் Dr. திருமலை மோகன் மற்றும் மயக்கவியல் சிறப்பு மருத்துவர், Dr. கிருஷ்ணன் ஒருங்கிணைந்து நோயாளியின் முந்தையே கணுக்காலுக்கு ஏற்றவாறு செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) பயன்படுத்தி கணுக்கால் எலும்பு (Talus Bone) பொறுத்தப்பட்டது, மேலும் CT Scan படங்களின் (1 mm Slice Thickness). உதவியுடன் செயற்கை கணுக்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முதன் முறையாக தமிழகத்தில் எங்கள் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்