
“சாதனைக்கு வயது ஒரு தடையில்லை”என சேலம் மாவட்டம் நரசோதிப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ தொடக்கப்பள்ளி மாணவர்கள் Talent expo என்னும் நிகழ்ச்சியில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் செயல்பாடுகள் செய்தனர். இதில் அறிவியல், பொது அறிவு, சமூக அறிவியல், ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களை அடிப்படையாக வைத்து பலவகையான செயல்திட்டங்களைச் செய்தனர். இதில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் ஐந்தாம் வகுப்பிற்குட்பட்ட மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெற்றோர்களும் இந்த செயல்பாடுகளைப் பார்வையிட்டு மாணவர்களின் திறனை வியந்து பாராட்டுகளைத் தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்குச் சைதன்யா டெக்னோ பள்ளியின் துணைப்பொது மேலாளர் வெங்கட கிருஷ்ணா ரெட்டி அவர்களும் ,பள்ளியின் முதல்வர் மாலதி ராஜா, பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.