தென்காசி மாவட்டத்தில் காவல் நிலையங்கள் மற்றும் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் அலுவலகம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று அதனை உடனடியாக தீர்க்கும் பொருட்டும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள காவல் நிலையங்களில் பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன் அறிவித்திருந்தார் இதன் தொடர்ச்சியாக இன்று பல்வேறு காவல் நிலையங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது செங்கோட்டை காவல் நிலையத்தில் காவல் நிலைய ஆய்வாளர் ஷியாம் சுந்தர் உதவி ஆய்வாளர்கள் இளவரசி சிரசையன் இசக்கி ஆகியோர் தலைமையில் பொது மக்கள் குழுவிற்கு நாள் கூட்டம் நடைபெற்றது இந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 30 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.