சேலம்

தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 65-ம் ஆண்டு விழா  வள்ளியப்பா கலை அரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் 2022-2023 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில்,தேசிய அளவிலான CII Industrial Innovation Award 2021 (இரண்டாம் முறை), Engineering Education Excellence Award 2022 மற்றும் மாநில அளவிலான ISTE – Best Chapter Chairman Award 2022 (5-வது முறை), TNSI Award 2021-ல் முதல் பரிசு என கல்லூரியின் எண்ணற்ற சாதனைகள்,250 க்கு மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களில் மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்லூரி தொலைநோக்குத் திட்டங்கள் ஆகியவற்றை விரிவாக எடுத்துரைத்தார்.தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் சொ.வள்ளியப்பா அவர்கள்,தனது தலைமை உரையில்,மாணவர்கள் சவால்களை சாதனைகளாக மாற்ற வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார். இவ்விழாவில்,கல்லூரியின் துணைத்தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா மற்றும் தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாணவர்கள் தங்கள் கற்றல் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும்,மாணவர்கள் தங்களது புதுமையான கண்டுபிடிப்புகளைக் கொண்டு புதிய தொழில்கள் (Start-ups) துவங்க சிறப்பான வழிகாட்டுதலுடன்,நிதியுதவியும் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.இவ்விழாவில், சேலம்,மேற்பார்வை பொறியாளர்,TANGEDCO,பாலசுப்ரமணியன் மற்றும் தாமோதரன் சுப்ரமணியன் துணைத் தலைவர்,விண்வெளி மற்றும்

பாதுகாப்பு AVTEC லிமிடெட், பெங்களூரு அவர்கள் தலைமை விருந்தினர்களாகவும், கல்லூரியின் முன்னாள் மாணவர் பிரகாஷ் ஜெயக்குமார்,துணை பொது மேலாளர்,ஏதர் எனர்ஜி பிரைவேட் லிமிடெட்,பெங்களூரு அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.தொழில் நிறுவனங்களில் சிறந்து விளங்கும் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களுக்கு சிறந்த முன்னாள் மாணவர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.கல்வியில் சிறந்து விளங்கிய கல்லூரி மாணவ,மாணவியருக்கும், பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பிடித்தவர்களுக்கும் துறைவாரியாக பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் 2500-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.