காஞ்சிபுரம் மாவட்டம் 

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை பொது விநியோகத் திட்டம்-தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் சார்பாக காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோளிவாக்கம் ஊராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஊராட்சி மன்ற தலைவர் கே.உமா மகேஸ்வரி குமார் தலைமையில் நடைபெற்றது .

இம்முகாமில் பொது மக்களிடையே மனுக்கள் பெற்று ரேஷன் கார்டில் உள்ள பெயர் சேர்த்தல் நீக்கல், தொலைபேசி எண் மாற்றுதல், மற்றும் முகவரி மாற்றுதல் போன்ற வசதிகள் செய்யப்பட்டு இம் முகாமில் கோளிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரி குமார் முன்னிலையில் தீர்வு காணப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கோளிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கே.உமா மகேஸ்வரி குமார், துணைத் தலைவர் லட்சுமி சதீஷ் ,

ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஷோபனா ,பெருமாள், அண்ணாதுரை ,காந்தா ,அருள் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு , குடிமை பொருள் தனி வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் அரசு அலுவலர்கள் , ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் , கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.