கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், வெட்டிப்பெருமாளகரம் கிராமத்தில் ரூபாய் 42 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பீட்டிலான பஞ்சாயத்து செயல் அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழாவினை திமுக கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளரும், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான திரு.தா. உதயசூரியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவானது சின்னசேலம் ஒன்றிய துணைத் தலைவர் திரு. வி.வி. அன்புமணிமாறன், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. தென்னரசு பாண்டியன் மற்றும் உப தலைவர் தனம் பாலகிருஷ்ணன் ,வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. ஜெகநாதன், ஊராட்சி செயலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக கவுன்சிலர் வேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் திவ்யபாரதி கொம்பையன், மோகன், சின்ன சேலம் ஒன்றிய துணை செயலாளர் கோமதி குமார் மற்றும் பாண்டியன்குப்பம், க ல்லாநத்தம், தகரை நாககுப்பம் ஊராட்சி மன்ற தலைவர்களான சண்முகம், அமுதா பவுன்ராஜ் ஆசைமுத்து, நீலாவதி முருகேசன், கோகிலா பெரியான், வெட்டி பெறுமாளகரத்தின் வார்டு உறுப்பினர்கள், முக்கியஸ்தரான பேட்டரி வெங்கடேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் விழாவிற்கு சின்னசேலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராமன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.