ஈரோடு வடக்கு மாவட்டம் நம்பியூர் பேரூர் கழகம் சார்பில் பேரூர் கழக செயலாளர் எஸ்.பி ஆனந்தகுமார் ஏற்பாட்டில் கழகத் தலைவர் தளபதியின் ஆணையின்படி ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் அவர்கள் நம்பியூர் பஸ் நிலையத்தில் 9.4.2023-காலை 11:00 மணிக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோபி சட்டமன்றத் தொகுதியில் வாக்குச்சாவடி ஆய்வு பணிக்காக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட கோவை மாவட்ட கழக செயலாளர் சி.ஆர். ராமச்சந்திரன் மற்றும் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் பேரூர் கழக நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக நம்பியூர் பேரூராட்சி செயலாளர் எஸ்.பி ஆனந்தகுமார் பொதுமக்களுக்கு நீர்மோர்வழங்கினார்.