கோவை மாவட்டம் பெஸ்டன் பம்ப்ஸ்-ன் 21வது கோடை கால தடகள பயிற்சி முகாம் – 2023 மற்றும் கோவை அத்லெடிக் கிளப்பின் 23 ஆம் ஆண்டிற்கான  இரண்டாம் கட்ட இலவச பயிற்சி முகாம் கோவை காவல்துறை பயிற்சி மைதானத்தில் (சிட்டி மைதானம்)  முதற்கட்ட இலவச தடகள பயிற்சி முகாம் தொடங்கியது. பெஸ்டன் பம்ப்ஸ் கடந்த 21 ஆண்டுகளாக 7 வயது முதல் உள்ள மாணவ மாணவியர்க்கு இலவச தடகள பயிற்சி முகாம் நடத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து பெஸ்டன் பம்ப்ஸ் நிர்வாக இயக்கு ஸ்ரிபிரியா கெளரிசங்கர் நல்லாசியுடன் உதவி மூத்த தலைவர் ரத்தினவேலு முன்னிலையில் இந்த வருடமும் மார்ச் 27ம் தேதி முதல் முதற்கட்ட பயிற்சி முகாம் மாநகராட்சி விளையாட்டு வளாகம் மற்றும் காவலர் பயிற்சி மைதானத்தில்(சிட்டி மைதானம்)  தொடங்கியது. த்னைத்தொடர்ந்து  இரண்டாம்கட்ட பயிற்சி முகாம் ஏப்ரல் தொடங்கியது. இதுகுறித்து செயலர் மற்றும் தலைமை பயிற்சியாளர் எஸ்.சீனிவாசன் தெரிவிக்கையில் இந்த இலவச தடகள பயிற்சி முகாமில்  பல்வேறு தடகள தொழிற்நுட்பங்களில் மட்டும் உடல் திறன்களை வளர்க்க பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் மலையில் ஓடுதல் மற்றும் மணலில் ஓடுதல் சிறப்பு பழுதூக்கும் பயிற்சியும் கற்று கொடுக்கிறோம். எனவே இந்த இலவச பயிற்சி முகாமை பயன்படுத்தி கொண்டு மாணவ மாணவியர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் நீளம் தாண்டுதல் , உயரம் தாண்டுதல் குண்டு எறிதல், ஒடுதல், ஆகிய போட்டிகளில் வெற்றிப் பெற சிறப்பு பயிற்சியும், மற்றும் யோகா பயிற்சியும் மற்ற விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்ப உடல் திறன் பயிற்சிகளையும் வழங்க வருகிறோமென்று தலைமை பயிற்சியாளர் சீனிவாசன் தெரிவித்தார். எனவே இந்த பயிற்சி முகாமை மாணவ மாணவியர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பயிற்சியாளர்கள் குரு இலியாஸ்,அலெக்ஸ், கஸ்தூரி,திரு,நீண்டதூர பயிற்சியாளர் ராஜேஷ் ஆகிய கைதேர்ந்த பயிற்சியாளர்கள் கொண்டு பயிற்சியளிக்கப் படுகிறது.