. ராமநாதபுரத்தில் மாவட்ட பாஜக ஆலோசனை கூட்டத்தில் மாநில செயலாளர் கருப்புமுருகானந்தம் பேசும்போது கூச்சல் – குழப்பம். சேர்வீச்சு பரபரப்பு ராமநாதபுரம், ஏப் 13.ராமநாதபுரம் ஏபிசி மஹாலில் நடைபெற்ற மாவட்ட பாஜக ஆலோசனை கூட்டத்தில் மாநில செயலாளர் கருப்புமுருகானந்தம் பேசும்போது முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன் பெயரைக் கூறவில்லை எனகூச்சல் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டன. ராமநாதபுரம் மாவட்ட பாஜக ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் தரனி முருகேசன் தலைமையில் மவட்ட பொறுப்பாளர் முரளிதரன் முன்னிலையில் நடைபெற்றது மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் ராம்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் சண்முக ராஜ்.மாவட்ட விவசாய அணி தலைவர் கீழத்தூவல் சத்தியமூர்த்தி, மாவட்ட கல்வியாளர். பிரிவு தலைவர் நாகராஜன், முதுகுளத்தூர் முருகானந்தம்.கீரனூர் விஜயன் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பாஜக நிர்வாகிகள் திறளாக கலந்துகொண்டனர். மாநில செயலாளர் பேசும்போது முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன் பெயரை குறிப்பிடித்தால் கூச்சலிட்டனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தும் பாஜக தொண்டர்கள் யார்பின்னாலும் செல்லமாட்டார்கள்.எத்தனையே தலைவர்கள் வெளியேறி பின் தங்களை பாஜகவிலேயே இணைத்துக்கொண்டனர். ராமநாதபுரம் தொகுதியில் பிரதமரை போட்டியிட கோரிக்கை விடுத்துள்ளார். மாநில செயலாளர் கருப்புமுருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 20 24 பாராலு மன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் தமிழகத்தில் வலுவான கூட்டணி அமையும் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமரை போட்டியிட கோரிக்கை வைத்துள்ளேரம். பிரதமர் போட்டியிட்டால் ராமநாதபுரம் தொகுதி வளமான தொகுதியாக மாறும். காசி- ராமேஸ்வரம் இணைப்பு பெறும் உலக தலைவர்கள் ராமநாதபுரத்தில் முகாமிடுவார்கள். பிரதமர் போட்டியிடாவிட்டாலும் பாஜக தொண்டன் யார் போட்டியிட்டாலும் வெற்றிபெறச் செய்து அமைச்சராக்கி ராமநாதபுரம் தொகுதியை வளப்படுத்துவோம். ஒவ்வொறு தொண்டனும் பாராளுமன்ற தேர்தலை முன்னிலைப்படுத்தியே பணிகளை செய்ய வேண்டும். பேட்டி முடிந்தவுடன் சிலர் பிளாஸ்டிக் சேர்களை தூக்கிவீசியதால் கூட்டம் கலைந்து நாளா புறமும் ஓடியது. இதனால் திடீர் பதட்டமும். பரபரப்பும் ஏற்பட்டன