த
தென்காசி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மற்றும் தென்காசி மாவட்ட இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் மகளிர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெறும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ; பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரித்தல், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இளைஞர் நலன் (ம)விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சமூக நலன் (ம) மகளிர் உரிமைதுறை இணைந்து நடத்தும் மகளிர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி 18.042023 அன்று காலை 6.30 மணிக்கு இலஞ்சி இராமசாமி பிள்ளை அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியிலிருந்து 5 கி.மீ தூரம் வரை நடத்திட திட்டமிடப்பட்டு போட்டிக்கான வழித்தடம் அறிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி இலஞ்சி இராமசாமி பிள்ளை அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி → வள்ளியூர் சந்திப்பு பாரத் பள்ளி விலக்கு பாலாளி உணவகம் சிலுவை விலக்கு மேல இலஞ்சி , மீண்டும் இலஞ்சி இராமசாமி பிள்ளை அரசு உதவி பெறும் பள்ளியில் வந்தடைதல் போட்டியில் அனைத்து வயது பிரிவு பெண்களும் பங்கேற்கலாம்.
வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1000, இரண்டாம் பரிசு ரூ.750, மூன்றாம் பரிசு ரூ.500 மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. போட்டியில் பங்கேற்க்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் குளிர் பானம், குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது