தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே முள்ளன்விளை வடக்கு தெருவை சேர்ந்த பாலையா நாடார் மகன் சவரிமுத்து. இவருக்கு பத்து வயது நிரம்பிய நிலையில் 1962-ஆம் ஆண்டு வீட்டிலிருந்து கோபித்து கொண்டு வெளியூருக்கு சென்று விட்டார். குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் இவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
தற்போது 75 வயது முதியவராக நேற்று முன்தினம் அவர் சொந்த ஊருக்கே வந்தார். அப்போது அவரை உறவினர்கள் கட்டிப்பிடித்து வரவேற்று உபசரித்தனர். அவர் கூறுகையில், சேலம் பகுதியில் உள்ள டாஸ்மார்க் பாட்டில் தயாரிக்கும் கம்பெனியில் வாட்ச்மேனாக பணியாற்றி வந்ததாகவும், திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், வயது முதிர்ந்த நிலையில் உறவினர்களுடன் கடைசி காலத்தை கழிக்க திரும்பி வந்ததாக தெரிவித்தார. அப்போது ஊர் தலைவர் செல்வம் முன்னாள் ஊர் தலைவர் மோசஸ் நாடார் .உறவினர் சிவில் இன்ஜினியர் பாஸ்கரன். ரத்னா ஸ்டூடியோ உரிமையாளர் ஜேக்கப் சேகர குரு தேவ ஆசீர்வாதம் மற்றும் உறவினர்கள் பொதுமக்கள் வாழ்த்தினார்கள் .