தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள தி லிட்டில் பிளவர் பள்ளியின் சார்பாக தனியார் மண்டபத்தில் மழலையர்களின் அம்மாக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமை தாங்கினார். முதல்வர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக விருதுநகர் ஆர்.ஜே. மந்திரா பள்ளியின் செயலாளர் ராஜவள்ளி கலந்துகொண்டு தன்னம்பிக்கை உரையாற்றினார். அப்போது தாயார்கள் எப்படி சமூகத்திற்கும் ,நாட்டிற்கும், குடும்பத்திற்கும், வீட்டிற்கும் ஏற்ற சிறந்த குழந்தைகளை உருவாக்குவது எப்படி என்பது குறித்து தன்னம்பிக்கை உரையாற்றினார் .அதனை தொடர்ந்து பெரியகுளம் ஜெயராஜ் அன்ன பாக்கியம் கல்லூரியின் உதவி பேராசிரியர் சார்லட் ஷர்மிலி நோக்க உரையாற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் பாராட்டி பதக்கங்களும், கேடயங்களும் ,பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார் ,நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கு பெற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிகளை பள்ளியின் கல்வி ஆலோசகர் பெரைசலின் தொகுத்து வழங்கினார்._ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் கவிதா ராகினி ,பூமா உள்பட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.