திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியம் பெரிய கண்ணால பட்டி ஊராட்சியில் உலக தண்ணீர் தினம் முன்னிட்டு கிராம சபை கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் பெரிய கண்ணாலப்பட்டி ஊராட்சியில் உலக தண்ணீர் தினம் முன்னிட்டு கிராம சபை கூட்டம் கண்ணாலப்பட்டி கூட்ரோடு,VRPS பில்டிங் உலகத்தில் நடைபெற்றது இதில் உலக தண்ணீர் தினத்தில் கருப்பொருளை பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஜல் ஜீவன் திட்டம் இயக்கம், மகாத்மா காந்தி ஊரக தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ,பாரத நெட்வொர்க் இணையதள வசதி மற்றும் பொதுமக்கள் கருத்து குறித்து விவாதித்தல் ,இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் கருத்துகளாக சின்னகண்ணாலபட்டி கிருஷ்ணசாமி வட்டத்தில் சின்டெக் டேங்க் பழுதுபார்த்தல் இரண்டு மாத காலங்களாக கோரிக்கை முன் வைத்துக் கொண்டே இருக்கிறார்கள் இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் நாங்கள் இதற்கு முன்பு வேலை செய்த பில் வரவில்லை அது மட்டும் அல்லாமல் எத்தனையோ வேலைகள் செய்து பில் வராமல் பட்ஜெட் பிராப்ளத்தில் எந்த ஒரு வேலையும் செய்ய முடியவில்லை இதற்கு ஒரே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 30,000 தண்ணீர் டேங்க் வரும்வரை காத்திருக்க வேண்டும் என்று கூறினார். அதற்குப் பின்பு தீர்மானம் ஏற்றினார்கள் கிருஷ்ணசாமி வட்டம் சின்டெக் டேங்க் முதல் நந்தீஸ்வரர் ஆலயம் வரை பைப்லைன் எடுத்து தருமாறு கேட்டுக் கொண்டார்கள் அதுக்கு மட்டும் அல்லாமல் சில பகுதிகளில் சின்டெக்ஸ் தண்ணீர்களை வீணாக்குவது போல் வீடு வீடாக பை பயன்படுத்தி ஒருவருக்கு ஒருவர் மன உளைச்சல் ஆளாகிறார்கள் என்று கூறிய போது ஊராட்சி மன்ற தலைவர் அதற்குரிய பதிலை கூறிவிட்டு அமர்ந்தார். மானேரி வட்டம் குடிநீர் டேங்க் ஆபரேட்டர் தேவை, இலவச பேருந்து வசதி மற்றும் இதர கருத்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன் அவர்களின் தலைமையில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அண்ணாமலை அவர்களின் முன்னாலையும் , கிராம நிர்வாக அலுவலர் அன்பு அவர்கள், சாலை ஆய்வாளர் சுப்பிரமணியம், ஒன்றிய குழு உறுப்பினர் சாந்தகுமார் மற்றும் ஊராட்சி செயலாளர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மக்கள் நல பணியாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு இதை சிறப்பித்தனர்.