தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு கனிமொழி எம்பி., அமைச்சர் கீதாஜீவன் மாலையணிவித்து மரியாதை
த
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய சட்ட மேதை அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள அவரது சிலைக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி , சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான பெ.கீதாஜீவன் எம்எல்ஏ., அவர்களும் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து, மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, துணை மேயர் ஜெனிட்டா, மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோரும் மாலை அணிவித்தனர். இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.