வேலூர் மாவட்டம் ,முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி.பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடந்துவருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த நிலையில் காட்பாடி ரயில் நிலையத்தில்  பிருந்தாவன் விரைவு  ரயிலை மறித்து    நடைபெற்ற  ஆர்ப்பாட்டம்  வேலூர் மாநகர மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் (எஸ்.சி. பிரிவு) பொதுச்செயலாளர் சித்ரஞ்சன், காட்பாடி ஒன்றிய கமிட்டிதலைவர் இளங்கோ, சிறுபான்மை பிரிவு தலைவர் வாஹித்பாஷா, ஓ.பி.சி.மாநில செயலாளர் ரவி, வேலூர் மாநகராட்சி முதல் மண்டல தலைவர் பாலகுமார் ,   வேலூர் மாவட்ட (ஐஎன்டியூசி பிரிவின்) டிசிடியு தலைவர் பிரேம்குமார் , உள்ளிட்ட நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி கொடியை ஏந்தி   பிஜேபி அரசுக்கு எதிராக  கோஷங்களை எழுப்பினர்.  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட     ஆண் மற்றும் பெண் உள்ளிட்ட சுமார் 70 நபர்களுக்கும்  மேற்பட்டோரை   கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர்.