கோவை மாவட்டம் சிவானந்த காலனி பகுதியில் அண்ணல் கரம் சமூக நல அறக்கட்டளையின் சார்பில் டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணல் கரம் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் இருதயராஜ் அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு நோட்டுபுத்தகங்கள் மற்றும் பொது மக்களுக்கு 100 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள் கே.ராமு,சி.வி. பிரபு, ஆட்டோ ஆறுமுகம்,பாபு, ஸ்டாலின்,ஸ்டீபன் ராஜ்,பால்ராஜ், சிவக்குமார்,எலிசபெத் ஜோதிமணி,சிவா, அருண்குமார் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.