சூப்பர்-டூப்பர் ரெஃப்ரெஷர் 7அப்-
பிரபல இசையமைப்பாளர் அனிருத் நடித்துள்ள
சூப்பர்-டூப்பர் ரெஃப்ரெஷர் 7அப்-ன் இந்த கோடையில் பார்வையாளர்களை புத்துணர்ச்சியடையச்செய்யும் தனது உறுதிப்பாட்டிற்கு இணங்க, கிளியர்ரி ஃப்ரெஷிங்பானமான 7அப் பிரபல பாடகரும் இசை மேதையுமான அனிருத் ரவிச்சந்தருடன் இணைந்து ஒரு சூப்பர்-டூப்பர் மியூசிக்கலை உருவாக்கியுள்ளது. இசை மற்றும் திரைப்படத்துறைகளுக்கான தனது பங்களிப்புகளுக்காக பல விருதுகளை வென்றுள்ள அனிருத் ரவிச்சந்தர், இந்த இசை கீதத்தின் மூலம் பார்வையாளர்களை மேலும் புத்துணர்ச்சியடைய செய்யும் வகையில் 7அப் உலகிற்கு தனது தனித்துவமான பாணியையும் பெப்பி ஆளுமையையும் கொண்டுவருகிறார். தொடக்கக்காட்சியில், ஒரு சூடான, கசகசப்பான நாளில் கதாநாயகன் ஒரு போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டிருக்கிறார், மேலும் அவரைச்சுற்றியுள்ள அனைவரும் சோர்வாக இருப்பதை அவர் கவனிக்கிறார். கதாநாயகன் அருந்துவதற்காக பையில் இருந்த 7அப் பாட்டிலைத்திறக்கும் போது, 7அப் டிரக்கில் அனிருத் ரவிச்சந்தரின் போஸ்டர் அவரது கண்ணில்படுகிறது, போக்குவரத்து மற்றும் வாகனங்களின் சத்தத்தில் இருந்து அது அவரது கவனத்தை ஈர்க்கிறது. காட்சி வாகனத்திற்கு மாறுகிறது, அங்கு அனிருத் புதிய 7அப் சூப்பர் டூப்பர் ரெஃப்ரெஷர் விளம்பரத்தின் இசையுடன் கதாநாயகனை மகிழ்விக்கிறார். அனிருத் பாடும் போது, அவர் பார்வையாளர்களின் ஆளுமையையும் பிரதிபலிக்கிறார். மேலும் கதாநாயகனும் கூட்டமும் விரைவில் அவருடன் சேர்ந்து நடனமாடவும், வெப்பத்தை பொருட்படுத்தாமல் வேடிக்கையாக இருக்கவும் தொடங்குகின்றனர். 7அப் டிரக்கை திறந்து, அவரை நிஜ உலகத்துக்கும் அவரது 7அப் பாட்டிலுக்கும் கொண்டு வரும் போது, நம் ஹீரோவை தெறிக்கும் தண்ணீர் வரவேற்கிறது. இப்போது ட்ராஃபிக் நகர்ந்து விட்டதால், விளம்பரப்பலகையில் இருந்து கதாநாயகன் அனிருத் கண்சிமிட்டுவதை அவர் பார்க்கிறார். இந்த அறிவிப்பு குறித்து பேசிய பெப்சிகோ இந்தியா எனர்ஜி, ஹைட்ரேஷன் மற்றும் ஃப்ளேவர்ஸ் , மூத்த சந்தைப்படுத்தல் இயக்குனர் நசீப்பூரி,“7 அப் புத்துணர்ச்சியூட்டும் அனுபவங்களை வழங்குவதில் உறுதியாக உள்ளது மற்றும் இசைமேதை அனிருத் இதற்கு மிகச்சிறப்பாக பொருந்துகிறார். சூப்பர்-டூப்பர்ரெஃப்ரெஷர் கீதத்தை விட புத்துணர்ச்சியூட்டக்கூடியது வேறேதுமில்லை. அவருடன் கூட்டாண்மையை மேற்கொண்டுள்ளதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று கூறினார். புதிய விளம்பரம் குறித்து தனது உற்சாகத்தை பகிர்ந்துகொண்ட, பிராண்ட் தூதர், அனிருத் ரவிச்சந்தர்,“7அப் குடும்பத்தில் இணைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஏனெனில் இது நான் உண்மையில் பார்த்து வளர்ந்த ஒரு பிராண்ட் ஆகும். இசையமைப்பில் பணிபுரிவது மிகவும் புத்துணர்ச்சியூட்டுவதாக இருந்தது மற்றும் நாங்கள் இணைந்து மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான பயணம் சூப்பர்-டூப்பர் மகிழ்ச்சியை வழங்கியது. நான் தனிப்பட்ட முறையில் இதை மிகவும் விரும்புகிறேன். எனக்கு இணையாக பிற இளைஞர்களும் இதை விரும்புவதைக்காண நான் ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று கூறினார். பிராண்டின் புதிய சூப்பர் டூப்பர் ரிஃப்ரெஷர் விளம்பரத்தின் நீட்டிப்பாக, புதிய 7அப் டிவிசி ஆனது டிவி, டிஜிட்டல், வெளிப்புறம் மற்றும் சமூக ஊடகங்களில் 360 டிகிரி பிரச்சாரத்துடன் விளம்பரப்படுத்தப்படும்.