பள்ளிப்பட்டு பேரூராட்சியில் திமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் எம். எல். ஏ. எஸ்.சந்திரன் பங்கேற்பு”. திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சி சார்பில் திமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்க முகாமினை மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ். சந்திரன் எம் .எல். ஏ. தொடங்கி வைத்தார். திமுக தலைமை கழகத்தின் உத்தரவின்படி திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சி திமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. பள்ளிப்பட்டு பேரூராட்சி பகுதிகளில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாமினை மாவட்ட செயலாளர் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ் .சந்திரன் தொடங்கி வைத்து புதிய உறுப்பினர்களுக்கு சேர்க்கை படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினார். அதைத்தொடர்ந்து பேரூராட்சியில் பேரூராட்சி கழக செயலாளர் பேரூராட்சி துணைத்தலைவர் ஜோதி குமார், தலைமையில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், தர்பூசனை, இளநீர், பழங்கள், மற்றும் அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 6.10 லட்சம் மதிப்பீட்டில்நீழற்கூடம் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார் . இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை, பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன், பேரூராட்சி கவுன்சிலர்கள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பல கலந்து கொண்டனர்.