திருத்தணி மடம் கிராமத்தில்.எழுந்தருளியுள்ள. ஸ்ரீ வனதுர்க்கையம்மன் ஆலயத்தில். சித்ரா பௌர்ணமி விழா மற்றும் மழை வேண்டி.19 ம் ஆண்டு 108 பால்குட அபிஷேகமும் நடைபெற்றது. பரந்து விரிந்து. தோப்பும் துறவுமாய். மலை சார்ந்த பகுதியில். இயற்கையான இரம்மியத்தோடு எழில் கொஞ்சும் வகையில். அமைந்திருக்கிற இவ்வாலயம். வனம் சார்ந்த பூமி என்பதால் வனதுர்க்கையம்மன் ஆலயம் என்று பக்தர்கள் மூலம் அழைக்கப்படுகிறது. இங்கே ஆண்டுதோறும் தீமிதி திருவிழா. மற்றும் மாதம் ஒரு முறை பௌர்ணமி காலங்களில் அம்மனுக்கு அபிஷேகம. மஞ்சள் காப்பு. சந்தன காப்பு.  ஊஞ்சல் சேவை நடைபெற்று வருகிறது. இந்த சித்ரா பௌர்ணமி விழா முன்னிட்டு இந்த 108 குடம் பாலபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. சன்னதி தெருவில் உள்ள.வரசித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள். முழங்க 108   பால்குடங்களை.பக்தர்கள்.சுமந்து. ஊர்வலமாக சென்று.  முக்கிய வீதிகள் வழியாக அம்மன் ஆலயம் வந்து அடைந்தது .தொடர்ந்து அம்மனுக்கு பாலபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம். தீபாரதனைகள்  நடத்தி பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இரவு 8 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது.நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் சரஸ்வதி பூபதி. கவுன்சிலர் நாகராஜ் மேஸ்திரி. மற்றும் ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள். பக்தர்கள் இணைந்து.சிறப்பாக செய்திருந்தனர்.