தேனி அல்லிநகரத்தில் உள்ள தனியார் திருமண மஹாலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சட்டமன்ற தொகுதி அளவிலான பூத் கமிட்டி அமைப்பது குறித்து சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது தேனி நகர செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பெரியகுளம் ஒன்றிய பொறுப்பாளர் அன்னப்பிரகாஷ் பங்கேற்று முன்னிலை வகித்தார் மேலும் இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் அமைப்பு செயலாளர் எஸ் டி கே ஜக்கையன் பங்கேற்று வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பூத்துக் கமிட்டி அமைப்பது குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் அதிமுக நிர்வாகிகள் இளைஞர் மற்றும் இளம் பெண்களை தீவிரமாக அதிமுக உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும் என்றும், நாடாளுமன்றத் தேர்தல் சம்பந்தமாக சிறப்புரையாற்றினார்
மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் முறுக்கோடைராமர் ,மாவட்ட பொருளாளர் சோலைராஜ் ,பெரியகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சேகர்,மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகுரு ,நாராயணசாமி, பல்வேறு அணிகளை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் AsR பாலசந்தார் , தனலட்சுமி சொக்கலிங்கம் பேரூர் செயலாளர்கள் தீபன் சக்ரவர்த்தி, சுந்தரபாண்டியன் மற்றும் பலர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் நன்றி உரையினை தேனி நகர துணை செயலாளர் சுந்தரபாண்டியன் பங்கேற்று நன்றி உரையாற்றினார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் அதிமுகவின் வார்டு செயலாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்