தூத்துக்குடி. திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் நடைபெறற்து.இந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பிருமான கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான பெ.கீதா ஜீவன் ஆகியோர் திமுக அரசின் சாதனை குறித்து பேசினர்.அப்போது கனிமொழி கருணாநிதி பேசியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை. பொதுமக்களின் மீது அக்கறையற்ற, தெளிவற்ற அரசுதான் அது. தாங்கள் பதவியில் இருக்க வேண்டும் என்ற வகையிலேயே அன்று ஆட்சி நடத்தினார்கள். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை பாதுகாக்கும் வகையில் ஆட்சி நடத்தி வருகிறார் பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை செப்டம்பர் முதல் வழங்கப்பட உள்ளது. பெண்கள் படிக்க வேண்டும் என்ற வகையில் திருமண உதவி திட்டத்தை, கலைஞர் கொண்டு வந்தார். அதுபோல, உயர் கல்விக்கு செல்லக்கூடிய மாணவ மாணவியருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி, தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெண் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான பெண்கள் தற்போது உயர்கல்வி கற்க வந்துள்ளனர். இதுபோல் கடட்ணம் இல்லா பேருந்து பயண திட்டத்தால், பெண்கள் எங்கு செல்வது என்றாலும் யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய நிலை இல்லை. வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் இதன் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் முதல் மிச்சப்படுத்தி தங்களின் மற்ற தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள்.
கடவுள்களையும் கோயில்களையும் காப்பதாக சொல்லி கொள்ளும் பாஜகவும், ஆளுநர் ரவியும் ஒன்றுமே செய்யவில்லை. திராவிட மாடல் ஆட்சிதான் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் சொத்துக்களை மீட்டுள்ளது. திராவிட மாடல் காலாவதி ஆகவில்லை. ஆளுநர் பதவிதான் காலாவதி ஆகிவிட்டது. பிரிட்டிஷ் காலத்திலுள்ள மிச்சம். எச்சம் அது. ஆளுநர் பதவி என்பது ஓர் அலங்கார பதவி. அவசியம் இல்லாத அலங்காரம் தேவையில்லை. அரிதாரம் கலையப்படும். தூக்கி எறியப்படும்.திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதாகும். திராவிடம்தான் அனைவரையும் படிக்க வைத்தது. இந்த திராவிடத்தை காலாவதியாக்கும் முயற்சிகள் நடக்கிறது அது ஒருபோதும் இங்கு நடைபெறாது. இதுபோல் பேசி கொண்டு இருப்பவர்களை மக்கள் ஓட ஓட விரட்டும் காலம் விரைவில் வரும். வருகின்ற பாராளுமன்ற தேர்தலால் நாட்டில் பெரிய மாற்றம் வரும். அது தமிழ்நாட்டில் இருந்து துவங்கும்” என தெரிவித்தார் இந்த பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் தூத்துக்குடி மாவட்ட துணை செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மண்டல தலைவர்கள் நிர்மல் ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி உள்பட கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் என பெரும் திரளாக கலந்து கொண்டனர்.