கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத்  உத்தரவின் பேரில் காவலர்களுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மாவட்ட ஆயுதப்படையில் உள்ள காவலர்களுக்கு முதலுதவி பற்றிய சிறப்பு பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியினை திருநெல்வேலி சக்தி மருத்துவமனையை சேர்ந்த மரு. வெங்கடேஷ் பாபு  பங்கேற்று காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தார்.

இந்த பயிற்சியில் நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அருண் மற்றும் மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.