பெருங்கரை
திரவுபதி அம்மன் கோயில் பால்குட காவடி திருவிழா ஏராளமானோர் பங்கேற்பு
தஞ்சை மாவட்டம். பாபநாசம் தாலுக்கா, வடக்குமாங்குடி அருகே உள்ள பெருங்கரை கிராமத்தில் எழுந்தருளியுள்ள திரவுபதி அம்மன் கோயில் பால்குட திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது.திரவுபதி அம்மன் கோயில் வைகாசி உற்சவ திருவிழாவை முன்னிட்டு
அகரமாங்குடி அருகே உள்ள பொய்கை ஆற்றங்கரையில் கிராமவாசிகள், பெண்கள் பால்குடம், செடில் காவடி எடுத்து மேள தாளத்துடன் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர் பின்னர் அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனை செய்து அம்மனை வழிபட்டனர். இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது ஏற்பாடுகளை பெருங்கரை கிராமவாசிகள் செய்து இருந்தனர்