செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் அருகே உள்ள பெருங்கரணை பேரம்பாக்கம் சின்ன கயப்பாக்கம் புத்தூர் கிராமத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை அருந்தி எட்டு பேர் இறந்த நிலையில்  ஆறு பேர் கைது செய்து சிறையில் அடைத்தனர் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 

சாய் பிரணீத் அவர்கள் உத்தரவின் பெயரில் செங்கல்பட்டு டிஎஸ்பி தலைமையில் 20க்கும் மேற்பட்ட காவல் துறையினர் முதலியார் குப்பம் தழுதாளி குப்பத்தில் இன்று இரண்டாவது நாளாக கள்ளச்சாராயம் தேடுதல் வேட்டை நடைபெற்றது அப்போது ஆட்கள் செல்ல முடியாத முற்புதர் உள்ளே 35 லிட்டர் அளவு கொண்ட 3 கேன்களில் சுமார் 105 லிட்டர் ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு கீழே ஊற்றி அழிக்கப்பட்டது அதேபோல் மற்றொரு பகுதியில் சில மாதத்திற்கு முன்பு சாராயம் காய்ச்சிய அடுப்பு பாத்திரம் 20 பேரல் போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அனைத்து பொருட்களையும் காவல் நிலையம் கொண்டுவரப்பட்டது