தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம்,புனித ஓம் கல்வி நிறுவனங்கள் சார்பில் கோவில்பட்டி காந்தி மண்டப புத்தக கண்காட்சியில் இசைக்கருவிகள் வாசிக்கும் போட்டி நடைபெற்றது.

கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் மே 14 முதல் மே 30 வரை புத்தகக் கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்று வருகிறது.இதில் தினசரி ஓவியம்,கட்டுரை,பேச்சு,இசைக்கருவிகள் வாசித்தல்,கிராமிய பாடல்,பரதநாட்டியம்,மாறுவேடபோட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இசைக்கருவிகள் வாசிக்கும் போட்டியில் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கீபோர்டு,மிருதங்கம், கித்தார்,வாய்ப்பாட்டு, டிரம்ஸ்,உள்ளிட்ட இசை கருவிகளை வாசித்தனர்.இதில் கோவில்பட்டி ஸ்ரீஹரா மெட்ரிகுலேஷன் பள்ளி 4ம் வகுப்பு மாணவன் உமேஷ்  கண்களை துணியால் மூடி ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலை கீ போர்டில் வாசித்து அசத்தினார்.புத்தக கண்காட்சிக்கு வருகை தந்த  அனைவரும் இசையை ரசித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.

பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன், மேனாள் காஞ்சிபுரம் மாவட்ட நூலக ஆய்வாளர் பூல்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர் சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்.

இசைக் கருவிகளை  வாசித்த மாணவர்களுக்கு  புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமணப் பெருமாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் இளையரசனேந்தல்  அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை முருக சரஸ்வதி,ரோட்டரிசங்க உறுப்பினர் நடராஜன்,தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர்கள் ராஜபாண்டி, சண்முகம் உள்ளிட்ட ஷெக்கினா இசைப்பள்ளி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் புத்தக விற்பனையாளர்கள் சங்க பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.