,,
பாபநாசம் அருகே உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பேப்பர் திருத்துவதற்காக வந்திருந்த வெளியூர் பேராசிரியர்கள் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள ரெகுநாதபுரத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது இங்கு பேப்பர் திருத்தும் பணிக்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து பெண் பேராசிரியர்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இங்கு வந்து கல்லூரியிலேயே தங்கி பேப்பர் திருத்தும்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
இரவில்
பாலிடெக்னிக் ஊழியர்கள் சிலர் குடிபோதையில் வந்து பெண் பேராசிரியர்கள் தங்கியுள்ள அறை கதவை தட்டுவதாகவும். பெண் பேரசிரியர்களிடம் தவறாகவும். ஆபாசமாகவும். பேசியதாக கூறப்படுகிறது இதுகுறித்து பெண் பேராசிரியர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த
வெளியூர் பேராசிரியர்கள் 100க்கும் மேற்பட்டோர் பேப்பர் திருத்தும் பணியை புறக்கணித்து கல்லூரி வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தர்ணாவில் ஈடுபட்டு வந்த ஆசிரியராகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது பெண் பேராசிரியர்கள் பலர் கல்லூரியில் தங்கியிருக்கும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும்.இரவில் மதுபோதையில் வந்த தங்களிடம் ரகளை செய்த கல்லூரி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.