தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் தமிழ் தேசிய மாணவர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் விடுதலைக் கழகம் சார்பில் தமிழக முழுவதும் மதுபானங்களை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி மக்கள் திறன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நிலவன் தலைமை வகித்தார். செல்லத்துரை பாண்டியன் முன்னிலை வகித்தார் அருள்மொழி தேவன் வரவேற்புரை ஆற்றினார். நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தங்கவேல், வழக்கறிஞர் பகத்சிங், உலக தமிழ் கழகம் தலைவர் நிலவழகன், உலக தமிழர் பேரவை பொதுச் செயலாளர் தமிழரசன், இளைஞர் மாணவர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பாவெல், மக்கள் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் கபிலன், தமிழின விடுதலைக் கழகம் தலைவர் வேனில் மைந்தன், குருசாமி,செங்கணன்,தமிழீழன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அறவே தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மாணவர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.