பன்னீரில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுத்தனுப்ப சூப்பரான ரெசிபி இது.
தேவையான பொருட்கள் : சப்பாத்தி – 5, பன்னீர் துருவல் – கால் கப், கேரட் துருவல் – சிறிதளவு, நறுக்கிய குடைமிளகாய் – சிறிதளவு, வெங்காயம் – ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), தக்காளி சாஸ், சோயா சாஸ் – தலா 2 டீஸ்பூன், வெண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: வாணலியில் சிறிதளவு வெண்ணெய்விட்டு உருகியதும் வெங்காயம், பன்னீர் துருவல், குடைமிளகாய், கேரட் துருவல், உப்பு, தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து வதக்கி இறக்கவும். தோசைக்கல்லில் சிறிதளவு வெண்ணெய் விட்டு உருகியதும், சப்பாத்திகளைப் போட்டு இருபுறமும் சூடு செய்து எடுக்கவும். சப்பாத்தியின் ஓரத்தில் தயாரித்து வைத்துள்ள பன்னீர் கலவையை வைத்து, சுருட்டி லஞ்ச் பாக்ஸில் வைத்துக் கொடுத்தனுப்பவும். சூப்பரான பன்னீர் ஃப்ராங்கி ரெடி.