தென்காசி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட கடையநல்லூர் கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் செயற் பொறியாளர் அலுவலகம் கடையநல்லூரில்  நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் எஸ்.குருசாமி கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர ( பொறுப்பு ) கடையநல்லூர் கோட்டம் கற்பக விநாயகசுந்தரம் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர் குறைதீர்க்கும் முடிந்தவுடன் மின் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் பேசும்போது அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிகள் விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் துவக்கப்பட்டு மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு வருவதால் பள்ளிகளுக்கு உள்ள மின் இணைப்பை ஆய்வு செய்து தரமான மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய உத்தரவிட்டார். பள்ளி மாணவ மாணவிகளிடம் மின்சார பாதுகாப்பு மற்றும் மின் சிக்கனம் பற்றி தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் முன் அனுமதி பெற்று பாதுகாப்பு வகுப்புகள் தொடர்ச்சியாக நடைபெற உத்தரவிட்டார். ஜூன், ஜூலை, ஆகஸ்ட், மாதங்களில் காற்று அதிகம் வீசுவதால் மின் பாதைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய அருகில் செல்லும் மரக்கிளைகளை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். விநியோகப் பிரிவில் உள்ள பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உண்டான மின்மாற்றிகளை ( Distribution Transformer ) முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டார். கடையநலலூர் கோட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். மேலும் மின் நுகர்வோர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரிவிக்க அறிவுரை வழங்கினார். பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 தொடர்பு கொண்டு மின்சாரம் சம்பந்தமான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.