புதிய பி-செக்மன்ட் கிராஸ்ஒவர் மாடல் பெருமளவு ரிடிசைன் செய்யப்பட்டுள்ளது. டொயோட்டா C-HR கார் பிளக்-இன் ஹைப்ரிட் வடிவில் அறிமுகம் செய்யப்படலாம்.

டொயோட்டா நிறுவனம் இரண்டாம் தலைமுறை C-HR எஸ்யுவி மாடலுக்கான டீசரை வெளியிட்டது. புதிய C-HR எஸ்யுவி மாடல் ஜூன் 26-ம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக இந்த காரின் ப்ரோலோக் கான்செப்ட் மாடல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சப்-காம்பேக்ட் கிராஸ்ஒவர் மாடலின் ப்ரோடோடைப் டெஸ்டிங் நடைபெற்றது. டீசர்களின் படி புதிய எஸ்யுவி மாடலின் பின்புறம் டெயில் கேட் முழுக்க பேரலல் லைன்கள் இடம்பெற்றுள்ளது. இதன் நடுவே டொயோட்டா லோகோவுக்கு மாற்றாக டொயோட்டா C-HR எழுத்துக்கள் காணப்படுகின்றன.