தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் நலன் மற்றும் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால். செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் உள்ள ஏழை. மற்றும் நலிவடைந்தோர் குடும்பங்களை சார்ந்த பெண்களை மகளிர் சுய உதவிக் குழுக்களாக ஒருங்கிணைந்து அவர்களுக்கு சுழல் நிதி, சமூக முதலீட்டு நிதி உள்ளிட்டவை மாநில அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார அளவிலான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் பிபிஆர்சி., தொழில் கடன் வழங்கும் விழா வட்டார இயக்க மேலாளர்.சி. மணி தலைமையில் நடைபெற்றது .திட்ட இயக்குனர் மலர்விழி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில். வட்டார ஒருங்கிணைப்பாளர். வி.விஜயா அனைவரையும் வரவேற்று பேசினார்..இதில் 40 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.1.85 கோடி மதிப்பில் வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டன. இந்த நலத்திட்ட உதவிகளை திருத்தணி. சட்டமன்ற உறுப்பினர்.எஸ். சந்திரன் கலந்து கொண்டு. மகளிருக்கு இந்த அரசு செய்யும் உதவிகள். பெண்கள் முன்னேற்றத்திற்காக நம்முடைய முதலமைச்சர் கொண்டு வந்திருக்கிற திட்டம். இதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் வகைகள். உள்ளிட்டவை குறித்து சிறப்புரையாற்றி. நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருத்தணி ஊராட்சி மன்ற கூட்டமைப்பின் தலைவர். எஸ். நரசிம்மராஜ். திட்டக்குழு உறுப்பினர் டி. எஸ். ஷியாம்சுந்தர், நகராட்சி கவுன்சிலர் கே.எஸ்.அசோக்குமார் திமுக ஒன்றிய செயலாளர் பா.ஆர்த்திரவி. வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், ஹரி. குமார். ஆர்த்தி. திருநாவுக்கரசு. மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.